ஏடிஎம்மில் உட்கார்ந்து இருந்த காவலாளியை கடித்த பாம்பு..!
சங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்ததில் தனியார் ஏடிஎம் வங்கி காவலாளி உயிரிழந்தார். ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம்மில் சின்ன முத்தையா என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். அப்பொழுது பணியில் இருந்தவரை பாம்பு கடித்துள்ளது.
இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி போகிறார். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





