நேபாள பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி ஆலோசனை..!
இந்தியா மற்றும் நேபாள பிரதமர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். நேபாள பிரதமர் புஷ்ப கமல் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இரு நாடுகள் இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
கடந்த மே மாதம் இந்தியா வந்த புஷ்ப கமல் மூன்றாம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு நாடுகளிடையே வர்த்தகம், வெளியுறவு, பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றார். அதன் தொடர்ச்சியாக இருநாட்டு பிரதமர்களும் தற்பொழுது ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





