கேரளாவில் திடீரென எரிந்த விமானம்.. அவசர அவசரமாக தரையிறக்கம்..!
கேரளாவில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரளாவின் கொச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று சார்ஜாவுக்கு புறப்பட்டது.
சிறிது நேரத்தில் பயணி ஒருவர் விமானத்திலிருந்து கருகும் வாசம் வருவதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை மீண்டும் கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றிய பிறகு விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் விமானத்தில் தீ பற்றியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இருப்பினும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை ஏற்பாடு செய்தது. அந்த விமானம் 175 பயணிகளுடன் தாமதமாக ஷார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





