--- --:--:-- --

மகளிர் உரிமை தொகை.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை..!

9

களிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

 

மகளிர் உரிமை திட்டம் முதற்கட்ட முகாமில் இதுவரை 79.6 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் ஏழு லட்சத்து 63 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக சிறப்பு திட்ட செயல் துறை தெரிவித்துள்ளது. முதல் கட்ட சிறப்பு முகாம் இத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நாளை தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

 

இந்த நிலையில் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon