அண்ணாமலை நடைப்பயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டி..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 28ஆம் தேதி நடைபெற்ற நிலையில் பயணத்தின் பொழுது மக்களிடமிருந்து புகார்களை பெற பெட்டி ஒன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
புகார் பெட்டியின் அறிவிப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள், பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லஞ்சம், ஊழல், சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இந்த திட்டத்தில் புகார் மனுவாக போடலாம் எனவும் இறுதியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





