வகுப்பறையின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்..பறிபோன உயிர்கள்..!
உக்ரைனில் பள்ளிக்கூடம் மீது விழுந்த ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ரஷ்யா போர் குற்றம் புரிந்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 16 மாதங்களாக நடந்து வருகிறது.
அவ்வப்போது இரு நாடுகளும் ஜூன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் ஒரு பள்ளிக்கூடத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. அப்பொழுது அந்த பள்ளிக்கூடத்தின் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





