--- --:--:-- --

பள்ளி மாணவியிடம் சில்மிஷம்.. கண்டித்தவரை கத்தியால் தாக்கிய சிறுவர்கள்..!

10

சென்னையில் பள்ளி மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதை கண்டுபிடித்த உறவினரை சிறுவர்கள் கத்தியால் தலையில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவரின் சகோதரி மகள் சென்னையில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

கடந்தாண்டு பள்ளிக்கு செல்லும் வழியில் சிறுவர்கள் சிலர் பின் தொடர்வதாக அந்த மாணவி வீட்டில் கூறியுள்ளார். இதனை அவரது பெற்றோர் தமிழ்ச்செல்வனிடம் கூறியுள்ளனர்.

 

அதன் பிறகு சம்பந்தப்பட்ட சிறுவர்களை தமிழ்ச்செல்வன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓராண்டு கழித்து இந்த விவகாரம் தொடர்பாக பேச தமிழ்ச்செல்வனை சிறுவர்கள் செல்போனில் அழைத்து உள்ளனர்.

 

பின்னர் சிறுவர்கள் கூறிய இடத்திற்கு சென்ற தமிழ்ச்செல்வனை மறைத்திருந்த சிறுவர்கள் கத்தியால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தப்பிச்சென்ற மூன்று சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon