--- --:--:-- --

ஒரு தலை காதல்.. மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்..!

3

சென்னையில் ஒரு தலை காதலால் கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரங்கிமலை பகுதியில் வசித்து வரும் அஷ்மிதா என்பவரை கலைஞர் நகரை சேர்ந்த நவீன் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

 

அவருடன் பேசுவதை அஸ்விதா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த அஸ்விதாவை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் அப்பொழுது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன் அஸ்விதாவை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான்.

 

ரத்த வெள்ளத்தில் துடித்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நவீன் செல்போன் எண்ணை கொண்டு அவரை பிடிக்க நேரில் விரைந்தனர்.

 

நவீனை துரத்தி பிடித்த பொழுது சினிமாவை மிஞ்சும் காட்சிகளும் அரங்கேறின. இதனையடுத்து நவீன் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon