பால் பூத்திலே அட்டையை வழங்க வேண்டும் : ஓபிஎஸ் வலியுறுத்தல்
பால் அட்டைதாரர்கள் பாதிக்கப்படும் வகையில் திமுக அரசு செயல்படுவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுவரை பூத்தில் வழங்கப்பட்டு வந்த அட்டை இனிமேல் ஆவின் அலுவலகங்களில் மட்டுமே அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனால் பால் அட்டை வாங்குவதற்காக மக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டி இருக்கும் என பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதல்வர் உடனடியாக தலையிட்டு மக்கள் எந்த பூத்தில் பால் வாங்குகிறார்களோ அதே இடத்தில் பால் அட்டை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





