ஆடு மேய்க்க சென்ற மூதாட்டி.. தலை இல்லாமல் கிடந்த கொடூரம்..!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மூதாட்டி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேரணாம்பட்டை அடுத்த சாத்நகர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி.
52 வயதான இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் ஆடு மேய்த்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற விவசாய தோட்டத்தில் மூதாட்டி காது மற்றும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூதாட்டி அணிந்திருந்த நகைகளும் திருடப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





