டீ டம்ளரில் புழு.. தட்டி கேட்ட தூய்மை பணியாளர்களை அசிங்கப்படுத்திய உரிமையாளர்..!
கோவையில் புழு இருந்த டீயை குடித்த தூய்மை பணியாளர் வாந்தி எடுத்ததையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை ராஜவீதி பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சதீஷ், முத்துக்குமார், அறிவழகன், உதயகுமார் ஆகியோர் தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்குள்ள சூர்யா பேக்கரியில் ஐந்து பேரும் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அந்த டம்ளரில் புழு ஒன்று இருந்துள்ளது. இது குறித்து கேட்டதற்கு நீங்கள் சாக்கடையில் பணி புரிகிறீர்கள் உங்களிடமிருந்து தான் அந்த புழு வந்துள்ளது என பேக்கரி நிர்வாகி தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தூய்மை பணியாளர்கள் கடைவீதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





