--- --:--:-- --

காலை உணவு திட்டத்திற்கு ரூ.404 கோடி ஒதுக்கீடு..!

5

பள்ளிகளில் காலை உணவு திட்டம் 31 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது காலை உணவு திட்டமும் சில பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இதனால் 15 லட்சத்தை 75 ஆயிரத்து 900 மாணவர்கள் பயன்பெறுவார்கள் சமூக நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காலை உணவு திட்டம் செலவினங்களுக்காக 404 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon