--- --:--:-- --

ஆற்றுப் பாலத்தின் நடுவே நின்ற ரயில்..!

4

ஹைதராபாத் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சுமார் 4 மணியளவில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது முன்பதிவில்லா பெட்டியில் இருந்த ஒரு பயணி அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார்.

 

இதனால் ரயில் சூளூர்பேட்டை மற்றும் அக்கம்பேட்டை இடையே உள்ள கலிங்க ஆற்றுப்பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டது. பாலத்தில் ரயில் நின்றதால் குறிப்பிட்ட ரயில் பெட்டிக்கு செல்ல வழியில்லை.

 

எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல்துறையினர் ஜேசிபி எந்திரத்தை பயன்படுத்தினார். ரயில்வே கான்ஸ்டபிள் ஜேசிபி இயந்திரம் வழியாக பெட்டிக்குள் சென்று அபாய சங்கலியை பிடித்து சரி செய்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon