--- --:--:-- --

ஆசையாய் பள்ளிக்கு சென்ற சிறுவன்.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

8

சென்னையில் பள்ளிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவன் வலிப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தான். முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த கங்காதரன் என்ற மாணவன் நேற்று பள்ளிக்கு வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தான்.

 

இதனை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இதனிடையே நெற்றியில் காயத்தோடு கடந்த தனது மகனுக்கு முதலுதவி கூட பள்ளியில் செய்யவில்லை என்று கங்காதரனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon