--- --:--:-- --

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை..!

4

மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்கும் நிலையில் அங்கு கூடுதலாக துணை ராணுவ படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 

அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலந்து கொண்டார்.

 

மணிப்பூரில் நிலவும் சூழ்நிலை, இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டிருந்தார். தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon