தங்க சுரங்கத்தை தோண்ட முயன்ற 31 பேரின் நிலை என்ன..?
தென்னாபிரிக்காவில் மூடப்பட்ட தங்கச் சுரங்கத்தை தோண்ட முயன்ற 31 பேர் உயிரிழந்துள்ளது ஒரு மாதத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெல்கோம் பகுதியில் ஏற்கனவே மூடப்பட்ட தங்கச்சுரங்கத்தை தோண்ட முயன்ற பொழுது விஷ வாயு தாக்கி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
தங்கள் உறவினர்களை காணவில்லை என பலரும் புகார் தெரிவித்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொழுது இந்த கோர விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





