டிராக்டர் மோதி குளத்தில் விழுந்த மின் கம்பத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோர மின்கம்பத்தின் மீது டிராக்டர் மோதி மின்கம்பி அறுந்து அருகில் இருந்த குளத்தில் விழுந்ததில் அங்கு குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னூர் கிராமத்தை சேர்ந்த பிரகதீஸ்வரி என்ற அந்த மாணவி வீட்டு அருகே உள்ள குளத்தில் துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த டிராக்டர் ஒன்று குளத்தோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதியுள்ளது.
இதில் மின் கம்பியானது அறுந்து குளத்தில் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து பிரகதீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு பிரகதீஸ்வரியின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆக வர வேண்டிய மகள் கண்முன்னே இறந்து கிடப்பதை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





