--- --:--:-- --

மணப்பாறை அருகே பயங்கர விபத்து.. நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

3

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசு பேருந்தும் காரும் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்பங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார். மணப்பாறை அடுத்த உடையார்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உட்பட ஐந்து பேர் காரில் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

 

கல்குத்தனூர் என்ற இடத்தில் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பை தாண்டி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதியது.

 

இதில் அந்த பேருந்து சாலையோரம் இருந்து 10 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் உரு தெரியாமல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த ஐந்து பேரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

அருகில் இருந்த மக்கள் விரைந்து சென்று காயம் அடைந்த பேருந்து பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் காவல் கண்காணிப்பாளர் இருவரும் விபத்து பகுதியை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon