தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன் : முதலமைச்சர்
தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற கருத்தை வரவேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விமர்சனம் செய்வது பொறுப்புள்ள அமைச்சருக்கு அழகல்ல என்றும் அவர் பதில் அளித்தார்.
தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என்றால் தமிழிசை எல்.முருகனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை எனில் எந்த திட்டங்களையும் எடுத்துச் சொல்ல அவர்களுக்கு எந்த விவரமும் இல்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமிழுக்கு செம்மொழி போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது காங்கிரஸ் அரசியல் தெரிவித்துள்ளார்.
ஊழல் குறித்து காங்கிரஸ் திமுக கூட்டணியை விமர்சிக்கும் பாஜக, ரபேல் ஊழலில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





