--- --:--:-- --

நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு.. என்ன ஆனது பயணிகளின் நிலை..?

1

எகிப்தில் சுற்றுலா படகு தீப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. எகிப்தில் செங்கடல் கடற்கரையில் உள்ள இடத்தில் படகு திடீரென தீப்பிடித்து எறிந்தது.

 

படகில் இங்கிலாந்தை சேர்ந்த பதினைந்து பேர் உட்பட 27 பேர் பயணம் செய்தனர். தீ விபத்து ஏற்பட்டதுடன் 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில்மூன்று பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

எகிப்தில் செங்கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞரை சுறா மீன் விழுங்கியதால் அந்த கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon