--- --:--:-- --

பொம்மை துப்பாக்கியை வைத்து மிரட்டல் விடுத்த இளைஞர்கள்..!

5

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொம்மை துப்பாக்கியை காண்பித்து லாரி ஓட்டுநரை மிரட்டிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் பேப்பர்லோடு ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார்.

 

பல்லடம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சென்ற பொழுது முன்னுக்கு பின் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் காரில் வந்த மகேந்திரன் மற்றும் அபிஷேக்குமார் இருவரும் லாரி ஓட்டுனருடன் சண்டையில் ஈடுபட்டனர்.

 

மேலும் தங்களிடமிருந்து பொம்மை துப்பாக்கியை காண்பித்து ஓட்டுநரை மிரட்டியுள்ளனர். இது குறித்து அளித்த புகாரின் பேரில் அந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon