அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டும் கும்பல்..!
தனியார் தொண்டு நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்தவர்கள் தன்னுடைய அந்தரங்க வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மைலாப்பூரை சேர்ந்த மும்தாஜ் என்ற பெண் மக்கள் பார்வை என்று தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக பணிபுரிகிறார். அங்கு பழக்கமான ஹரிகிருஷ்ணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதோடு தங்களுக்கு கடன் வழங்குவதாக கூறி டிரஸ்ட் மூலமாக லட்ச கணக்கில் பணம் கேட்டு வாங்கி உள்ளனர்.
அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காததால் மும்தாஜ் பணம் கொடுப்பதை நிறுத்திக் கொண்ட நிலையில் அந்த கும்பல் ட்ரஸ்ட் நடத்தி வரும் சித்ரா என்பவரிடம் ஐந்து லட்சம் பணம் பெற்று தரும்படி whatsapp மூலம் மிரட்டல் விடுவதாகவும் இல்லை எனில் வீட்டிற்கு வந்து செல்லும் பொழுது எடுத்த அந்தரங்க வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவேன் என கூறி மிரட்டுவதாகவும் புகார் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





