ஆதார் இணையதளத்தில் ஏற்பட்ட திடீர் சர்வர் கோளாறு..!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் இணையத்தில் சர்வர் கோளாறு காரணமாக ஆதார் இணையதளத்தில் சேவைகள் குளறுபடியால் மக்கள் அவதி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதார் இணையதளத்தில் சர்வர் கோளாறால் பொதுமக்கள் ஆதார் சேவைகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
அதன்படி இணையதளம் மூலமாக கைரேகை வைக்கும் இயந்திரத்தை பொருத்தும் பொழுது கைரேகை வைக்கும் இணையதளம் ஆனது ஆதார் சர்வீஸில் உடன் லிங்க் ஆகவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் கைரேகை வைக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் திணறி வருகின்றனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





