உணவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 30 பேருக்கு வாந்தி, மயக்கம்..!
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இதனால் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாவட்ட வருவாய் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





