--- --:--:-- --

பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை.. பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்..!

3

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூத்த மருத்துவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சியில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கு மூத்த மருத்துவர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவமனை உறுப்பினர்கள் பயிற்சி மாணவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து பயிற்சி மருத்துவர்கள் கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon