--- --:--:-- --

போர்வெல் இயந்திரத்தில் இருந்த குழாய் விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி..!

7

காஞ்சிபுரம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் பொழுது இயந்திரத்தில் இருந்து கீழே விழுந்த இரும்பு குழாய் தாக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

 

கோதீஸ்வரன் என்பவர் வீடு கட்டுவதற்காக போர்வெல் இயந்திரம் மூலமாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் இருந்து 20 அடி உயர இரும்பு குழாய் கழன்று பணி செய்து கொண்டிருந்த சத்தீஸ்கர் மாநில புலம்பெயர் தொழிலாளி மேக்ரா மீது விழுந்ததில் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

வழக்கு பதிவு செய்த போலீசார் அஜாக்கிரதையாக செயல்பட்டதாக போர்வெல் இயந்திர உரிமையாளர் செல்வராஜ் மற்றும் ஓட்டுனர் மணி ஆகியோரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon