--- --:--:-- --

காவேரிப்பட்டினத்தில் சாலையில் உலா வரும் இரண்டு யானைகள்..!

6

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே 2 யானைகள் ஏரிக்கரையில் முகாம் இட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து இடப்பெயர்ந்த இரண்டு யானைகள் கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அருகே உள்ள கிராமத்தில் சுற்றி வருகிறது. அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வரும் வனத்துறையினர் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

 

யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் கூறியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon