மதுரை ரயில்வே சுரங்க பாலத்தில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்து..!
மதுரை திருப்பரங்குன்றத்தில் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் அரசு பேருந்து கொண்டதால் பரபரப்பு நிலவியது. புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே அமைந்துள்ள ரயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து சிக்கிக் கொண்டதில் அதில் இருந்த பயணிகளும் மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் தேங்கிய நீரில் நடந்தபடியே பாதுகாப்பாக வெளியேறினர். மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்ட அரசு பேருந்து மீட்கப்பட்டது. பின்னர் சுரங்கப்பாதை வழியாக வாகனம் செல்லாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டது. சுரங்க பாலத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





