பக்கத்து வீட்டுக்காரனின் கதவை லாவகமாகத் திறந்து கொள்ளையடித்த நபர்..!
சென்னை ராமாபுரத்தில் பக்கத்து வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை மட்டும் லாவகமாக திறந்து திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை வீட்டு உரிமையாளர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளார்.
அன்னை சத்யநகரை சேர்ந்த நல்லசிவம் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியே செல்லும் போதெல்லாம் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த பணம் திருடு போய் உள்ளது. மூன்று முறை இதுபோல் நிகழ்ந்த நிலையில் நல்ல சிவமும் அவரது மனைவியுமே ஒருவர் மீது ஒருவர் சந்தேகமடைந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவருமே பணத்தை எடுக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு திருடனை பிடிக்க திட்டம் போட்டனர். அதன்படி நல்ல சிவம் வீட்டிற்குள் இருந்து கொண்டு அவரது மனைவி வீட்டை பூட்டிச் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தளர்வாக இருந்த கதவை முன்னும் பின்னும் ஆக தள்ளி லாவகமாகத் திறந்து வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அங்கு மறைந்திருந்து நல்ல சிவம் அவனை மடக்கி பிடித்து தருமடி கொடுத்துள்ளார். இளநீர் வியாபாரம் செய்து வரும் மணிகண்டன் செல்போன் வாங்கவும் மது அருந்தி உல்லாசமாக சுற்றவும் திருடியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





