தனியார் பேருந்து மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பலி..!
திருச்சி அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஜங்ஷன் ரயில்வே நெல்லி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். ரயில்வே ஊழியர் ஆன இவருக்கு திருமணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அதி வேகமாக வந்து தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் தூக்கி வீசப்பட்ட ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பேருந்து ஓட்டுனர் மதுபோதையில் பேருந்தை இயக்கியது தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





