--- --:--:-- --

பிரியாணி சாப்பிட சென்ற இளைஞர்களின் கார் பேருந்து மீது மோதி விபத்து..!

5

திருவள்ளூர் அருகே அதிகாலை பிரியாணி சாப்பிடுவதற்காக சென்ற இளைஞர்களின் கார் மினி பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.

 

அரக்கோணத்தை சேர்ந்த இளைஞர்கள் ஐந்து பேர் பிரியாணி சாப்பிடுவதற்காக சென்னை புளியந்தோப்பு பகுதியை நோக்கி காரில் சென்ற பொழுது இருளச்சேரி பகுதி அருகே தொழிற்சாலையில் இருந்து பெண் ஊழியர்களை ஏற்றி வந்த மினி பேருந்து மீது மோதியது.

 

இதில் காரில் சென்ற மூன்று இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon