பிறந்தநாளில் விளையாட்டாக செய்தது வினையானது எப்படி..?
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது மாணவர் கீழே விழுந்து சுயநினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த பத்தாம் தேதி மருத்துவக் கல்லூரி மாணவர் பிறந்தநாள் விழாவை மாணவர்களுடன் கொண்டாடுகிறார். அப்பொழுது மாணவர்கள் கட்டியணைத்து ஒருவருக்கொருவர் தூக்கிக் கொண்டும் விளையாடி உள்ளனர்.
இந்நிலையில் கீழே விழுந்தவர் மீது சக மாணவர்கள் விழுந்து விளையாடினர். இதில் அவர் மூளைக்கு செல்லக்கூடிய முக்கிய நரம்பு கழுத்துப்பகுதியில் துண்டானதால் அவர் சுயநினைவு இழந்துள்ளார்.
பின்னர் சக மாணவர்கள் மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மூன்று மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சில மாணவர்கள் மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு விசாரித்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





