--- --:--:-- --

அனுமதி இன்றி மாணவர்களுக்கு விடுமுறை.. விடுதிக்காப்பாளர், சமையலர் உள்பட நான்கு பேர் பணியிடை நீக்கம்..!

1

அரியலூர் அருகே அனுமதி இன்றி மாணவர்களுக்கு விடுமுறை அளித்த விவகாரத்தில் அரசு கல்லூரி மாணவர் விடுதி காப்பாளர், சமையலர், காவலர் உள்ளிட்ட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அரசு பிற்படுத்தப்பட்ட நலத்துறையின் கீழ் இயங்கி வரும் கல்லூரி மாணவர் விடுதியில் கடந்த 8ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மாணவர்கள் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி விடுமுறை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

 

இது தொடர்பாக கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்புடைய விடுதிக்காப்பாளர் பிரபு, சமையலர் கோபாலகிருஷ்ணன், சுரேஷ்குமார், காவலர் அண்ணாதுரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon