--- --:--:-- --

ஏரியாவில் நடந்த வாய் தகராறில் இளைஞரை கத்தியால் குத்திய சிறுவன்..!

8

விருத்தாச்சலம் அருகே சிறுவன் கத்தியால் குத்தியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மணலூர் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் விஜயகுமார்.

 

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிறுவனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது விஜயகுமார் நவீன் கழுத்தில் கத்தியால் கீறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் கத்தியால் விஜயகுமாரின் கழுத்தில் குத்தியுள்ளான்.

 

இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் விஜயகுமார் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon