--- --:--:-- --

இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

8

ர்நாடகாவில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் நடப்பாண்டில் 5 மற்றும் 8ம் வகுப்புக்கான பொது தேர்வு நடத்துவதாக மாநில அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

 

இதை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி 5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது.

 

இந்த வழக்கில் அரசு தலைப்பில் ஆஜரான வழக்கில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு பொது தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு தேர்வு மீதான பயம் போகும் என வாதிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் திட்டமிட்டபடி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon