--- --:--:-- --

லிப்டில் மாட்டிக்கொண்ட தலை.. உயிருக்கு போராடிய ஊழியர்..!

4

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள பாத்திரக்கடையில் லிப்டில் சிக்கி உயிரிழந்த ஊழியரின் உடலை கட்டிங் மெஷின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் மீட்டனர். சீத்தல் என்டர்பிரைசஸ் என்ற மொத்த பாத்திர கடை 4 மாடிகளுடன் இயங்கி வருகிறது.

 

அந்த கடையில் பொருட்களை எடுத்து செல்ல திறந்த வெளி லிப்டை ஊழியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய் கிழமையை மாலையில் ராஜஸ்தானை சேர்ந்த சீமாரா என்ற ஊழியர் தரைத்தளத்தில் இருந்து பொருட்களுடன் நான்காவது மாடிக்கு லிப்ட்டில் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

 

அப்போது இரண்டாவது தளத்திலிருந்து கீழே எட்டிப் பார்த்ததாக கூறப்படும் நிலையில் அவரது தலை லிப்டின் பக்கவாட்டின் நான்காவது மாடி வரை தேய்த்தவாறு இழுத்து செல்லப்பட்டதால் அவர் சம்பவ இடடத்திலேயே உயிரிழந்தார்.

 

இதையடுத்து சக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டிங் இயந்திரத்தால் லிப்ட் கம்பிகளை வெட்டி எடுத்து உடலை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon