திடீரென முறிந்து ஆட்டோ மீது விழுந்த மரம்..பெண் பயணி உயிரிழப்பு..!
சென்னை தியாகராய நகர் பகுதியில் சாலையோரம் இருந்த மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோவில் பயணித்த பெண் உயிரிழந்தார். தியாகராய நகர் பகுதியில் சென்ற பொழுது சாலையோரம் இருந்த மரம் ஒன்று திடீரென சாலையில் சாய்ந்தது.
அந்த வழியே சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது. இதில் ஆட்டோவில் பயணித்த சூர்யா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த சூர்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுமதித்தனர். பின்னர் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





