திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய காதலன்..!
கர்நாடகாவில் ஐந்தாண்டு காதலுக்கு பின் திருமணத்திற்கு மறுத்த காதலியை கத்தியால் குத்திக்கொன்று காதலியின் உடல் மேல் அமர்ந்திருந்த கொடூர காதலனை போலீசார் கைது செய்தனர்.
காக்கிநாடா பகுதியை சேர்ந்த லீலா பவித்ரா என்பவர் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றாக பணியாற்றிய இளைஞரை காதலித்ததாக தெரிகிறது.
இதற்கிடையே திருமணம் செய்து கொள்ள கேட்ட பொழுது தங்களது வீட்டில் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று பவித்ரா கூறியுள்ளார். மேலும் பெற்றோரின் முடிவின்படியே நடந்திருக்கிறேன் எனவும் இளம்பெண் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் வேலை முடிந்து வந்த காதலியுடன் தகராறில் ஈடுபட்டு தான் கொண்டுவந்த கத்தியால் காதலியை 15 இடங்களில் குத்தியுள்ளார்.
அவர் உடல் மேல் அமர்ந்து கொண்டதால் சுற்றி இருந்தவர்கள் பெண்ணை மீட்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொடூர காதலனை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





