--- --:--:-- --

புதிய கொரோனா தடுப்பூசி போட்ட இளைஞர் பரிதாப பலி..!

8

டுப்பூசி போட்ட பின் மரணமடைந்த இளைஞரின் குடும்பத்திற்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், நீண்ட கால விசா வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால விசா உள்ளிட்டோருக்கு இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்.

 

அவ்வாறு தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் எவரேனும் உயரிழந்தால் அவர்களுக்கான இழப்பீடு தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வங்கதேசத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

 

இந்த தடுப்பூசி போட்டு 21 நாட்களுக்கு பின்னர் அந்த இளைஞர் உயிரிழந்தார். இது குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா தடுப்பூசி போட்ட 21 நாட்களில் உயிரிழந்த இளைஞரின் இறப்புக்கான காரணம் மையோகார்டிஸ் என சான்று அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

இது கொரோனா தடுப்பூசி தொடர்புடைய மர்மத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு இந்திய மதிப்பில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon