புலியை சமைத்து சாப்பிட்ட கிராமம்..!
ஆந்திர மாநிலத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த புள்ளியை சமைத்து சாப்பிட்டவர்களை கைது செய்ய வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கிராம விவசாயிகள், விளை நிலங்களை வனவிலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்காமல் இருப்பதற்காக சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சார வேலி அமைத்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஆக்குபழம் அருகே வடபழனிப்பகுதியில் பெண் புலி ஒன்று கார் கடத்தி புலி ஒன்றின் கால் தடத்தை கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி உள்ளனர்.
ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்து கிராம மக்களுக்கு உணவாகிவிட்டது. புலியின் கறியை பங்கு போடுவதில் கிராம மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த விஷயம் வனத்துறைக்கு தெரிய வந்தது. கிராமத்திற்கு நேற்று சென்ற வனத்துறையினர் புலியின் மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கருதப்படும் சிலரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர்.
இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட இடத்தில் அவர்கள் புலிக்கறி சாப்பிட்டதை ஒப்புக்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





