டெல்லியில் பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது கடும் தாக்குதல்..!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழக மாணவர்களும் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏவிபிவி அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இடதுசாரி அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலானது.
இந்த சம்பவத்தில் பெரியார் மார்க்சிஸ்ட் போன்ற தலைவர்களின் புகைப்படங்களை ஏவிபிவி அமைப்பினர் உடைத்ததாகவும் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே மோதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





