--- --:--:-- --

வீடியோ கேமால் ஏற்பட்ட பார்வை குறைபாட்டால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!

4

கோவை, வள்ளலார் அருகே வீடியோ கேமால் பார்வை குறைபாடு ஏற்பட்ட மன உளைச்சலில் பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பி.எஸ்சி பட்டதாரியான மதன் குமார் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் அவர் அடிக்கடி ஆன்லைனில் விளையாடி வந்துள்ளார்.

 

இதனால் கடந்த சில நாட்களாக அவர் பார்வை குறைபாடு மற்றும் கடுமையான தலைவலியால் அவதி அடைந்து வந்தார் என கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon