கட்டுமான துறையில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கின்றன : பிரதமர் மோடி
உத்தரகாண்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் உள்கட்ட அமைப்பு அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்திற்கான வேலை வாய்ப்பு திருவிழாவை காணொளி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி பணியாட்கள், மூலதன பொருட்கள், சிறு வணிகர்கள் என யாராக இருந்தாலும் கட்டுமான துறையில் தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறினார்.
போக்குவரத்து துறையிலும் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருவதால் உத்தரகாண்டில் உள்ள இளைஞர்கள் பலருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைத்து வருவதாக பெருமிதம் தெரிவித்தார். கடந்தாண்டு அக்டோபர் 22ஆம் தேதி வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து சுமார் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





