--- --:--:-- --

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்..பரிதாபமாக பிரிந்த உயிர்..!

8

ன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை சேர்ந்தவர் 47 வயது பெண். இவரது கணவர் கூலி வேலை செய்து வரும் நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

 

இதில் மகள்கள் இருவரும் திருமணம் ஆகி சென்றதாலும் மகன் வெளிநாட்டில் தங்கி பணிபுரிவதாலும் தம்பதி தனியே வசித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரி வீட்டில் தனியாக இருந்து வந்த கூலி தொழிலாளியின் மனைவியிடம் பலமுறை சில்மிஷத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் ஆத்திரமடைந்த பெண் இளைஞரின் பெற்றோரிடம் சொன்னதோடு இளைஞரையும் கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் இதை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது தொடர்ந்து அவரை நோட்டம் விட்டு வந்துள்ளார்.

 

இந்த நிலையில் உறவினர் ஒருவரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி கலைப்பாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து வீட்டினுள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்.

 

இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிடவே பயந்து போன எட்வின் அவரை சரமாரியாக தாக்கி கழுத்தில் மிதித்ததில் நிலை குலைந்து பின் மயக்கமடைந்திருக்கிறார். இதன்பின் மயக்க நிலையில் வைத்தே பெண்ணே பாலியல் பலாத்காரம் செய்த எட்வின் சுயநினைவின்றி கிடந்த பெண்ணை அப்படியே போட்டுவிட்டு தப்பி உள்ளார்.

 

இதன் பின்னர் பெண்ணின் நிலை அறிந்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஒன்றும் அறியாதது போல் எட்வினும் பெண்ணின் உறவினர்களுடன் மருத்துவமனை சென்றதும் காவல் நிலையம் உடன் சென்று புகார் அளித்து நாடகம் ஆடியதும் தான் கொடூரம்.

 

இதில் பாதிக்கப்பட்ட பெண் கோமா நிலைக்கு சென்று நிலையில் பல மருத்துவமனைகளில் அனுமதித்து காப்பாற்ற போராடியுள்ளனர் உறவினர்கள். இதற்கிடையே பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

சம்பவத்தில் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுதே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் ஒரு கட்டத்தில் எட்வினிடம் நடத்திய விசாரணையில் அனைத்தும் அம்பலமாகியுள்ளது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon