முதல்வருக்கு எதிராக போர் கொடி – பாஜக போராட்டத்தில் வெடித்தது வன்முறை..!

லைநகர் டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுபான ஊழல் தொடர்பாக டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

முதலமைச்சர் வழக்குக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி அலுவலகம் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.