மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய செய்த விவகாரம் – தலைமை ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்து மாரியம்மன் நகரிலிருந்து அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யவேண்டும் என்று சில நாட்களுக்கு முன் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

 

மாவட்ட உதவி கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன், பெரியகுளம் கோட்டாட்சியர் சிந்து ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர் கனகராஜ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.