பெண்ணிடம் தவறாக நடக்கும் என்றதால் அப்படி செய்தேன் என எஸ்.பி விளக்கம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் கோவச்சந்திரத்தில் எருது விடும் விழா கலவரத்தில் போராட்டக்காரர்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது ஏன் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜோர் குமார் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.
எருது விடும் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலவரத்தில் பிடிப்பட்டவரை பூட்ஸ் காலால் எஸ்பி எட்டி உதைத்தில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரிடம் அந்த இளைஞர் தவறாக நடந்து கொண்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





