இந்தியாவில் 37 லட்சம் whatsapp கணக்குகள் திடீர் முடக்கம்..!

ந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சத்துக்கு அதிகமான whatsapp கணக்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாக whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

13 லட்சத்து 89 ஆயிரம் கணக்குகளை எந்த ஒரு முன்னறிவிப்பு இன்றி முடக்கியதாக பாதுகாப்பு நடவடிக்கைக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக whatsapp தெரிவித்துள்ளது.

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 37 லட்சத்து 16 ஆயிரம் கணக்குகளை முடக்கிய whatsapp நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 36 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.