பேனா நினைவுச் சின்னம் வைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் சீமான்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் எழுத்து சேவையை போற்றும் வகையில் மெரினாவில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நினைவுச்சினம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கருத்து கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி சட்ட பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்டோர் சார்பில் பேனா நினைவு சின்னம் அமைக்க தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலுக்குள் நினைவுச் சின்னம் வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றார். அப்பொழுது சீமானின் பேச்சுக்கு அங்கு கூடியிருந்த திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





