--- --:--:-- --

திருட வந்ததாக கூறி இளைஞரை கட்டி வைத்து சித்திரவதை செய்த வட மாநிலத்தவர்..!

2

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை திருட வந்ததாக கூறி கட்டி வைத்து இரண்டு நாட்களாக அடித்து உதைத்து சித்திரவதை செய்த வட மாநிலத்தை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

சின்னா என்ற இடத்தில் தொழிற்சாலை கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு கடந்த 28ஆம் தேதி இரவு சென்ற பிரபாகர் என்பவரை அங்கு இருந்த உத்தரபிரதேசம் மற்றும் அஸ்ஸாம் தொழிலாளர்கள் பிடித்துள்ளனர்.

 

இரும்புக் கம்பிகளை திருட வந்ததாக கூறி அவர்களை இரண்டு நாட்களாக அடித்து துன்புறுத்தியுள்ளனர். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் பிரபாகரனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினார். அவர் சித்திரவதை செய்ததாக வட மாநிலத்தவர் ஆறு பேரை கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon